அகில இலங்கை ரீதியில் பழு தூக்கும் போட்டியில் பாண்டியன்குளம் மகாவித்தியாலையம் தொடர் சாதனை

முல்லைத்தீவு பாண்டியன்குளம் மகாவித்தியாலையம் , அகில இலங்கை ரீதியில் 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான பழு தூக்கல் போட்டியில் தொடர் வெற்றிகளைப் பெற்றுள்ளது.


அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டிகள் அண்மையில் பொலநறுவை றோயல் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.


இதில் முல்லைத்தீவு பாண்டியன்குளம் மகா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ரி.தர்சிகா 17 வயதிற்குட்பட்ட 49 கிலோ நிறைப் பிரிவில் சினெச் முறையில் 43 கிலோ பளுவையும் , கிளின் அன் ஜக் முறையில் 54 கிலோ பளுவையும் ஒட்டுமொத்தமாக 97 கிலோ பளுவைத் தூக்கி தங்கப் பதக்கத்தையும், 71 கிலோ எடைப் பிரிவில் ஈ.ஜீவிதா சினெச் முறையில் 40 கிலோ பளுவையும் கிளின் அன் ஜக் முறையில் 50 கிலோ பளுவையும் ஒட்டுமொத்தமாக 90 கிலோ பளுவைத் தூக்கி தங்கப் பதக்கத்தையும் சுவீகரித்துள்ளனர்.

அத்தோடு அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட போட்டியில் 17 வயதுப் பிரிவில் ஒட்டுமொத்தமாக புள்ளிகளின் அடிப்படையில் 3ம் இடத்தை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

தேசிய மட்ட பளுதூக்கல் முல்லைத்தீவு பாண்டியன்குளம் மகா வித்தியாலயம் இரு தங்கப் பதக்கங்கள்
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கலில் முல்லைத்தீவு பாண்டியன்குளம் மகா வித்தியாலயம் இரு தங்கப் பதக்கங்களைச் சுவீகரித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் தொடர் ஆண்டுகளாக தங்களின் திறமைகளை நிலைநாட்டிய வண்ணமிருக்கின்றார்கள்.

மேலும் ரி.தர்சிகா அவர்கள் ஆசியமட்ட பழுதூக்கல் போட்டியில் பங்கு கொண்டு முதலாம் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதுவரை ஜீவிதாவின் படம் கிடைக்கவில்லை இவரின் படம் கிடைத்தால் பதிவிடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap