இந்தியா, சீனாவிடமிருந்து மருந்துகளை கொள்வனவு செய்யவுள்ள இலங்கை

அரசாங்கத்துக்கு அரசாங்கம் என்ற விசேட திட்டத்தின்கீழ் இலங்கை இந்தியாவிடம் இருந்து அவசிய மருந்துகளை இறக்குமதி செய்யவுள்ளது.

இலங்கை மருத்துவத்துறையிடம் ஏற்கனவே 3 மாதங்களுக்கு தேவையான மருத்துவப்பொருட்கள் மற்றும் மருந்துகள் கையிருப்பில் உள்ளன.

எனினும் அதற்கடுத்த மூன்று மாதங்களுக்கும் மருந்துப்பொருட்களை கையிருப்பில் வைத்துக்கொள்ள சுகாதாரத்துறை விரும்புகிறது.

எனவே இந்தியாவிடமும் சீனாவிடமும் இருந்து மருந்துகளை கொள்வனவு செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப்பிரிவின் உதவிப்பணிப்பாளர் ஏடி சுதர்சன தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் சுமார் 200 வகை மருந்துகளுக்கான கொள்வனவு பட்டியல் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளதாக சுதர்சன குறிப்பிட்டுள்ளார்.

Share via
Copy link
Powered by Social Snap