கொரோனா நோயிலிருந்து எப்படி காப்பாற்றப்பட்டேன்? மீண்டுவந்த நோயாளி வெளியிட்டுள்ள தகவல்

ஸ்ரீலங்காவில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்த நோயாளி தான் காப்பாற்றப்பட்ட விதம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளார்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற போது சுடு நீர் மாத்திரமே அதிகமாக வழங்கப்பட்டதென கொரோனாவில் குணமடைந்த முதல் இலங்கையர் தெரிவித்துள்ளார்.

தனக்கு தினமும் 6 – 7 லீட்டர் சூடு நீர் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது நோயை குணப்படுத்துவதற்கு சுடு நீர் முக்கியமான காரணமாக அமைந்ததென மத்தேகொட பிரதேசத்தை சேர்ந்த ஜயந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் குணப்படுத்த சுடு நீர் மிக சிறந்த ஒன்றாகும் என தான் வைத்தியசாலையிலேயே தெரிந்துக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வார இறுதி பத்திரிகைக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த தகவலை தெரியப்படுத்தியுள்ளார்.

Share via
Copy link
Powered by Social Snap