விபத்தில் இளைஞர் பலி! ஏப்ரல் ஃபூல் என நினைத்து அழைப்பை துண்டித்த உறவினர்கள்!

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட் ஏறாவூர் சவுக்கடியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயை பலியாகியுள்ளார்.

ஏறாவூர் சவுக்கடி கடற்கரை வீதியில் நேற்றையதினம் உழவு இயந்திரமொன்றில் அதிவேகமாக பயணித்தபோது வேகக்கட்டுப்பாட்டை இழந்து பனை மரமொன்றில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் சம்பவ இடத்திலேயே மட்டக்களப்பு வாகரை பனிச்சங்கேணியைச் சேர்ந்த எஸ்.சுரேஸ்காந் (22வயது)என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை பொலிசார் மேற்கொள்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் வாகரையில் உள்ள உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தாருக்கு அங்கிருந்தவர்கள் தொலைபேசி மூலம் விடயத்தைக் கூறியபோது அதற்கு இன்று ஏப்ரல் ஃபூல் என்று எங்களுக்குத் தெரியும் PHONEஐ வையுங்கள் என்று அழைப்பை துண்டித்ததாகவும் கூறப்படுகின்றது.

Share via
Copy link
Powered by Social Snap