கனிம வள அகழ்வு அனுமதிப்பத்திரங்களின் காலாவதி திகதி நீடிப்பு

அனைத்து கனிம வள அகழ்வு அனுமதிப்பத்திரங்களின் காலாவதி திகதி எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், குறித்த பணியகத்தினால் வழங்கப்படும் மணல், மண், கற்கள் ஆகியவற்றை அகழ்வதற்கான அனுமதிப்பத்திரங்கள் எதிர்வரும் 30ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap