இலங்கையில் சூரியன் உச்சங் கொடுக்கும் என்று வானிலை அவதானிப்பு மையம் தெரிவித்துள்ளது.

சூரியனின் உச்சம் இன்று முதல் எதிர்வரும் 14ம் திகதிவரை இலங்கைக்கு நேர் திசையில் இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கு அமைய அம்பலாங்கொட, தல்கஸ்வேவ, பஸ்கொட, மித்தெனிய, உஸ்வேவ,

வீரவில ஆகிய இடங்களில் பகல் 12.13 அளவில் சூரிய உச்சம் நேரடியாக இருக்கும். இதேவேளை நாட்டில் மழை பெய்வதற்கான சாத்தியங்கள் உள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, சப்ரகமுவ, மேல், வடமேல், மத்திய, கிழக்கு, ஊவா, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழைக்கான சாத்தியங்கள் இருப்பதாக வானிமை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap