
சிங்கள புத்தாண்டு முடிவில் உயர் அபாயமற்ற பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு சாத்தியம் உண்டு என்று நேற்று (04) ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான கூட்டத்தில்
பேசப்பட்டுள்ளது.
இதனை ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சரியான நேரத்தில் அரசு எடுத்த முடிவு கொரோனா தொற்றை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. நாடு இன்னும் அபாய நிலையை எட்டவில்லை என்றும் குறித்த கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.