அறிகுறி வந்தால் “1390” அழையுங்கள்…

இந்நாட்களில் உங்களுக்கு இருமல், தடுமல் மற்றும் சுவாச பிரச்சினைகள் இருந்தால், 1390 இற்கு அழைக்குமாறும் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க இவ்வறிவிப்பை விடுத்துள்ளார்.

தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் 24 மணி நேரமும் செயற்படும் 1390 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனைகளை பெறவும், உரிய சேவைகளை ஒருங்கிணைக்கவும் மருத்துவர்கள் தயார் நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 1390 எனும் இலக்கத்திற்கு அழைக்கும் நோயாளியின் மருத்துவ நிலை குறித்து விசாரித்த பின்னர், தேவைப்பட்டால், 1990 சுவசெரிய அம்பியுலன்ஸ் சேவையையும் இந்த மையம் வழங்கும்.

Share via
Copy link
Powered by Social Snap