கொரோனா தொற்றுள்ள பெண் பிரசவித்த சிசுவுக்கு வைரஸ் இல்லை !

பேருவளை – பன்னில பிரதேசத்தைச் சேர்ந்த கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பிரசவித்த குழந்தைக்கு, கொரோனா தொற்று ஏற்படவில்லை என பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் வருண செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அத்தோடு, குழந்தை சிறந்த தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த நாகொடை வைத்தியசாலையின் வைத்தியர் உள்ளிட்ட அறுவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதுடன், குறித்த பெண்ணின் தாய், கணவன் உள்ளிட்ட 160 பேரும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Share via
Copy link
Powered by Social Snap