
தமக்கு தேவையான சட்டங்களை வகுக்காத பட்சத்திலும், பாதுகாப்பு உபகரணங்களை பெற்றுத் தராதபட்சத்திலும், தமது உயிருக்கான பொறுப்பை சுகாதார அமைச்சு பொறுப்பெடுக்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தற்போதைய துர்ப்பாக்கிய நிலையில், மக்களின் பணத்தின் ஊடாக தமக்கு கொடுப்பனவுகள் தேவை இல்லை எனவும், அது தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டு வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்தை சுகாதார அமைச்சு இரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எழுத்துமூலம் அனுப்பப்பட்டுள்ள கடிதத்திலேயே, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இதனைக் சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், தாம் சட்ட ஏற்பாடுகள் சிலவற்றை கோரியிருந்த போதிலும், அவை இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும், இதனால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண மேலும் குறிப்பிட்டுள்ளார்.