அனைத்து மருந்தகங்களும் நாளை திறக்கப்படும்.

நாட்டில் உள்ள அனைத்து மருந்தகங்களும் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதியான நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி திறக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட செயலணியின் கூட்டம் நேற்று (07) இடம்பெற்ற போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தலைமையிலும், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் பங்குபற்றுதலுடனும் விசேட செயலணியின் கூட்டம் இடம்பெற்றது.

சகல ஆயர்வேத மருந்தகங்களும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலத்திலும் திறக்கப்பட வேண்டும், சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒரு மருந்தகம் அல்லது ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது நடமாடும் சேவையை முன்னெடுக்கவும் அனுமதியளித்தல் போன்ற தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கொத்தமல்லி, இஞ்சி மற்றும் வெனிவெல்கட்டையை இறக்குமதி செய்தல். ஆயூர்வேத சிகிச்சையை பெறும் நோயாளிகளுக்கு தேவையான மருத்துகளை அஞ்சல் மூலம் பெற வழியேற்படுத்தி கொடுத்தல் உள்ளிட்ட தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன.

Share via
Copy link
Powered by Social Snap