
நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் உள்ள கொரியத் தூதரகத்தின் கொன்சியூலர் சேவைப் பிரிவு மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
கொரிய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தொழில் ரீதியான விசா மற்றும் நாட்டில் தங்கியுள்ள மாணவர்கள் குறித்தும் இலங்கை அரசாங்கம் கவனஞ் செலுத்த வேண்டும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், செல்லுபடியான விசாக்களை வைத்து இலங்கையில் தங்கியுள்ள மாணவர்கள் மற்றும் பணியாளர்கள், தென்கொரியாவுக்கு திரும்ப முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கையில் இருந்து தென்கொரியா திரும்பும் அனைவரும், இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர் எனவும் குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.