வவுனியாவில் மின்னல் தாக்கியதில் இளம் குடும்பஸ்தர் பலி.

வவுனியா நாகர் இலுப்பைக்குளம் பகுதியில் மின்னல் தாக்கியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இராசேந்திரகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான பெரியசாமி மங்கலேஸ்வரன் (25) என்பவரே உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் நேற்று (08) மாலை பெய்த மழை காரணமாக வீதியோரத்தில் காணப்பட்ட தென்னை மரத்தடியில் குறித்த நபர் ஒதுங்கியுள்ளார். இதன்போது தென்னை மரத்தின் மீது வீழ்ந்த மின்னல் குறித்த நபரையும் தாக்கியுள்ளது. இதில் குறித்த நபர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap