தடுப்பூசிகள், திரிபோஷா மற்றும் விட்டமின் வகைகளை வீடுகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை!

சிறுவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், சிறு குழந்தைகளுக்கான தடுப்பூசிகள், திரிபோஷா மற்றும் விட்டமின் வகைகளை வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த நடவடிக்கைகளை இலகுபடுத்தும் நோக்கில், அனைத்து சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகத்திற்கும் மேலதிகமாக வாகனமொன்றை வழங்கியுள்ளதாக அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன குறிப்பிட்டார்.

இதுவரை சுமார் 350 சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களில் 250 அலுவலகங்களுக்கு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறைந்தளவு வாகனங்களை கொண்ட அலுவலகங்களுக்கு, தேவையான வாகனங்களை வழங்குமாறு மாகாண பிரதம செயலாளர்களுக்கு அறிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எவ்வித இடையூறும் இன்றி இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லுமாறு, அனைத்து சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கும் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன கூறினார்.

Share via
Copy link
Powered by Social Snap