20 வருடங்களின் பின்னர் சுத்தமானது இலங்கை!

இலங்கையின் தற்போதைய சூழ்நிலையில் வளிமண்டலத்தில் காற்றுமாசு வீதம் வெகுவாக குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் கடந்த 20 வருட கால வரலாற்றில் வளிமண்டல காற்றுமாசு வீதம் வெகுவாக குறைவடைந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இலங்கையின் பிரதான நகரமாக திகழ்கின்ற கொழும்பை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆராய்வின் ஊடாகவே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அநுராதபுரம், குருநாகல், புத்தளம், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிரதான நகரங்களில் வாகன போக்குவரத்துக்கள் இடம்பெற்றாத நிலையில், காற்றுமாசடைவது வெகுவாக குறைவடைந்துள்ளது.

20 ஆண்டுகளுக்கு பின்னர் சுத்தமான இலங்கை
கொழும்பு பகுதியில் தற்போதுள்ள வளிமண்டல காற்றுமாசு வீதம் குறித்து அவதானிக்கும் போது, மிகவும் சிறிய தூசியாக கருதப்படும் பி.எம் 2.5 தூசி மைக்ரோ கிராம் 10ஆகவே காணப்படுகின்றது.

ஊரடங்கு காலப்பகுதி என்பதால் வாகனங்களின் மூலமான மாசுக்கள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளமையே இதற்கான காரணமாகும்.

Share via
Copy link
Powered by Social Snap