இவ்வாண்டு இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படவுள்ள பாதிப்பு- உலக வங்கி!

உணவு, மருந்துகள் மற்றும் உள்நாட்டு நுகர்வு போன்ற அடிப்படை பொருட்கள் மட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியா தொடர்பில் வெளியிடப்பட்ட முன்னறிவிப்பிலேயே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் நாட்டின் பொருளாதாரம் இந்தாண்டு 3% தொடக்கம் 0.5% வரையான எதிர்மறை விகிதத்தில் நகரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் இவ்வாண்டு இலங்கையானது 2.6 சதவீத வளர்ச்சியை எதிர்ப்பார்ப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.

எவ்வாறாயினும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் உள்ளிட்ட சுற்றுலா மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகள் அனைத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளன.

இதேபோல, ஜூன் மாதமளவில் ஆடை ஏற்றுமதி வருவாயும் 1.5 பில்லியன் டொலர் வரையில் வீழ்ச்சி எற்படுமென ஆய்வாளர்கள் கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share via
Copy link
Powered by Social Snap