தென்கொரியா எப்படி கொரோணாவை கட்டுப்படுத்தியது

கடந்த ஜனவரி 20ஆம் தேதி தென்கொரியாவில் முதலாவது கொரோணா நோயாளி இனங்காணப்பட்டார்.

105 நாடுகளைச் சேர்ந்த 900 மருத்துவத்துவ நிபுணத்துவம் வாய்ந்தவர்களை இணையத் மூலம் இணைத்து உரையாடினர்.

அவர் முதலில் சொன்ன செய்தி , நாங்களும் முதலில் அச்சப்பட்டோம். வேகமாக தான் நோயும் பரவியது .அதனை ஒரு கட்டுக்குள் கொண்டுவர எங்களால் முடிந்தது..

உலகில் இறப்பு விகிதம் 4.34 இருக்கிறது . ஆனால் தென்கொரியாவில் இறப்பு விகிதத்தை குறைவாக இருந்தது. 9437 பேர் பாதிக்கப்பட்டது , அதில் 3500 க்கும் மேற்பட்டவர்கள் வீடு திரும்பியுள்ளனர். அதில் 126 பேர் இறந்து போயிருக்கிறார்கள் . இறப்பு விகிதம் தென்கொரியாவில் 1.4 விழுக்காடு என்ற அளவில் இருக்கிறது..


அங்கு என்ன செய்தோம் என்பதை டாக்டர் லி சொல்லியிருக்கிறார். அதை இப்போது சமூக வலைத் தளங்கள் எல்லாவற்றிலும் ஐக்கிய நாடுகள் அவை ஒளிபரப்பி இருக்கிறது . லி கூறியதாவது அவர் மூன்று கோட்பாடுகளையும் 4 வழிமுறைகளையும் குறிப்பிடுகிறார்

மூன்று கோட்பாடு

01 அதாவது முதலில் எங்கே நோய் இருக்கக்கூடும் என்று கண்டறிந்தது.

02 .பிறகு சோதனைகள் செய்துவது.

03. சிகிச்சை அளிப்பது

எங்களுடைய மூன்று கோட்பாடு என்று கூறிவிட்டு இதனை நாங்கள் நான்கு வழிமுறைகளில் செய்கிறோம் என்றார்.

அந்த நாலையும் படிப்படியாக அவர் விளக்கிச் கூறினார்.

01 வெளிப்படைத்தன்மை ( எதையும் அரசு மறைக்கக் கூடாது என்றுதான் நாங்கள் முதலில் அறிவுறுத்தியிருந்தோம். இந்தப் பகுதியில் கூடுதலாக நோய்த்தொற்று இருக்கிறது என்பதைச் சொன்னால் அது மக்களை அச்சுறுத்துவதாக என்று கருதவேண்டாம் , எச்சரிப்பது .எனவே வெளிப்படைத் தன்மை என்பது மிக மிக முதன்மையானது )

02 அதை கட்டுப்படுத்துவதும் குறைப்பதும் என்கிற இரண்டு நடைமுறைகளை இரண்டாம் வழியாக அவர் குறிப்பிடுகிறார். எங்கே இருக்கிறதோ அதனை கட்டுப்படுத்த முயற்சி , பரவாமல் தடுக்க முயற்சி , அங்கேதான் பள்ளிகள் மூடப்படுகின்றன, அங்கேதான் கூட்டங்கள் கூடுவது தடுக்கப்படுகிறது. அப்படி தடுக்கப்பட்டு பிறகு குறைக்கப்படுகிறது.

03 அவர் குறிப்பிடுவது இதுதான் மிக முதன்மையானது செய்திருக்கிறார் . நாங்கள் சோதனைகளை தொடர்ந்து செய்து கொண்டிருந்தோம் . மிக விரைவாக சோதனை செய்தோம். கருவிகளை நாங்கள் நம்பினோம் . கொரோணாவிற்கு எதிரான யுத்தத்தில் இந்த சோதனைக் கருவிகள் தான் நமக்கு இருக்கிற மிகப்பெரிய ஆயுதம் என்று குறிப்பிடுகின்றார்.

இந்த சோதனைக்கருவிகளை பெருமளவில் தென்கொரியாவில் பயன்படுத்தினார்கள் . அதுதான் எங்களைக் காப்பாற்றியது. நீங்கள் அப்படி சோதனை செய்யாமல் காப்பாற்றவே முடியாது என்பது டாக்டர் லி சொல்லுகிற மூன்றாவது வழிமுறை அது எப்படி செய்யப்பட்டது என்பதையும் குறிப்பிடுகிறார்.


04 முழுமையான இந்த சோதனைக்கு உட்படுத்தப்படல் நோய்த்தொற்று எந்தப்புதியில் இருக்கிறதோ அந்தப் பகுதியில் இருக்கிற மக்களையெல்லாம் விரைவாக சோதனை செய்வது .

ஒரு வாரத்தில் 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். ஒரு வாரத்திற்கு ஒரு பகுதியில் 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் சோதனை செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்கிற போது மிக விரைவாக அது தடுக்கப்படுகிறது

இந்த வழிகளைப் பின்பற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீட்டுக்கு போய் இருக்கிறார்கள் . நாங்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக ஊரடங்கைத் தளர்த்தி பெரும் பிரச்சினையைக் கடந்து விட்டோம் .என்று கூறினார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap