தேயிலையின் எண்மான ஏலச் சந்தை!

இலங்கைத் தேயிலையின் எண்மான ஏலச் சந்தை எதிர்வரும் 16ம், 17ம் மற்றும் 19ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்ததன் பின்னர் இடம்பெறும் இரண்டாவது தேயிலை ஏலச் சந்தை இதுவாகும்.

ஏற்கனவே கடந்த வாரம் நடத்தப்பட்ட ஏலச் சந்தையின் போது ரஷ்யா, துருக்கி, உக்ரெயின், ஐரோப்பிய மற்றும் மத்தியகிழக்கு நாடுகளின் கொள்வனவாளர்கள், அதிகளவில் தேயிலை கொள்வனவில் ஈடுபட்டனர்.

இதனால் எதிர்வரும் தினங்களில் நடைபெறவுள்ள ஏலச்சந்தையில் 4.5 மில்லியன் கிலோ அளவான தேயிலைக்கு கேள்வி நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் ஊடாக தேயிலைக்கு அதிக விலை கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக முகவர்கள் தெரிவிக்கின்றனர்.

Share via
Copy link
Powered by Social Snap