இலங்கைக்கு தேனிலவு கொண்டாட வந்த அமெரிக்க இளம் ஜோடியொன்று, இலங்கையின் கொரோனா தடுப்பு லொக் டவுனில் சிக்கி விழிபிதுங்கிக் கொண்டிருக்கிறது. சான் பிரான்சிஸ்கோவை சேர்ந்த புதுமணத் தம்பதியர் ஜான் மற்றும் மைக்கேல் சென்யார்ட் ஆகியோரே இவ்வாறு சிக்கியுள்ளனர்.
இந்த ஜோடி மார்ச் 17 அன்று இலங்கைக்கு வந்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர்களது விமான டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டன. அப்போதிருந்து, இராணுவம் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட தொடங்கியதுடன், ஊரடங்கு சட்டம் விதிக்கவும் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையில் தங்கியிருந்தாலும், தங்கள் அலுவலக பணிகளில் இங்கிருந்தபடியே அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இருவரும் சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிகின்றனங்களிற்குமிடையில் உள்ளன. நாங்கள் அடிப்படையில் எங்கள் வேலைநாளை மாலை 6 மணிக்குத் தொடங்குகிறோம். பின்னர் எங்கள் வேலை இரவு அதிகாலை 2 மணிக்கு முடிவடைகிறது, என்று மைக்கேல் கூறினார்.
இது நிச்சயமாக ஒரு வித்தியாசமான உணர்வு. ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட நாட்களில், தம்பதியினர் பெரும்பாலும் அதிகாலை 5 மணியளவில் எழுந்து நகரத்தை சுற்றி வருவதுடன், அடுத்த சில நாட்களுக்குத் தேவையான உணவு மற்றும் பொருட்களை சேகரிப்பதாகவும் தெரிவித்தனர்.