அரசாங்க அலுவலகங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்..

அரசாங்க அலுவலகங்கள் வழமையான நாளாந்த செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு உதவுமுகமாக, தற்போது நாட்டில் விதிக்கப்பட்டுள்ள COVID-19 தொடர்புபட்ட கட்டுப்பாடுகளை படிப்படியானதொரு அடிப்படையில் தளர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எனவே, அத்தகைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் புவியியற் பகுதிகளில் பணிகளை மீள ஆரம்பிக்கும் அனைத்து அரசாங்க அலுவலகங்களும் பின்வரும் வழிகாட்டுநெறிகளை கடைப்பிடிக்கவேண்டும்.

  • வேலைத்தலத்தில் COVID-19 ஐ தடுப்பதை உறதிசெய்வதற்குத் தேவையான அனைத்து சுகாதார பராமரிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும்.
  • ஊழியர்கள் கட்டங்கட்டமாக வேலைக்குத் திரும்பவதற்கான பொறிமுறையொன்றைத் திட்டமிட்டு அமுல்படுத்தவும்.
  • அரசாங்க சேவைகளை நாடிவரும் பொதுமக்கள் வேலைத்தலங்களில் அல்லது பொதுப் போக்குவரத்து முறைமைகளில் அளவுக்கதிகம் நிரம்பியிராதிருப்பதை உறுதி செய்வதற்கான விசேட நடவடிக்கைகளை அறிமுகம் செய்யவும்.
  • வீட்டிலிருந்தே பணியாற்றுதல் (WFH) மூலம் தொடர்ந்து வழமையானப் பணிகளை நிறைவேற்றவும்.
Share via
Copy link
Powered by Social Snap