கனடாவின் நோவா ஸ்கோடியாவில் பொலிஸாரின் சீருடையை அணிந்தவாறு நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டதில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கிராமிய நகரான போர்ட்டபிகியுவில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. ஐம்பத்தொரு வயது நபர் ஒருவரே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் .அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக சம்பவம் இடம்பெற்ற பகுதியை சேர்ந்த மக்களை வீடுகளிற்குள் இருக்குமாறு கேட்டுகொண்ட பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் பொலிஸாரின் சீருடையில் காணப்படுகின்றார் பொலிஸாரின் வாகனத்தை பயன்படுத்துகின்றார் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
குறிப்பிட்ட நபரிடம் ஆயுதங்கள் உள்ளன அவர் ஆபத்தானவர் எனவும் பொலிஸார் எச்சரித்திருந்தனர். குறிப்பிட்ட நபர் 12 மணிநேரம் இந்த வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
51 வயது கப்பிரியல் வோர்ட்மன் என்ற நபரே இந்த படுகொலைகளிற்கு காரணம் என தெரிவித்துள்ள பொலிஸார், அவர் அட்லாண்டாவின் பத்து இடங்களில் தாக்குதலை மேற்கொண்டார் எனவும் அவரால் ஏற்பட்ட ஆபத்து பின்னர் முடிவிற்கு கொண்டுவரப்பட்டது எனவும் தெரிவித்துள்ளனர்.