விலங்குகளின் வலி இப்போதாவது புரிந்ததா?.ஸ்ரத்தா கபூர் கேள்வி

தேசிய ஊரடங்கு காரணமாக மக்கள் தனித்து விடப்பட்டுள்ளனர். பலர் தங்கள் குடும்பத்துடனும், சிலர் தனிமை யிலும் நாட்கள் நகர்த்துகின்றனர். இதுபற்றி குறிப்பிட்டு, ‘தனிமையின் கொடுமை இப்போது தெரிகிறதா? தனிமையில் அடைக்கப்படும் விலங்குகளின் வலி புரிகிறதா?’ என்று நடிகை ஸ்ரத்தா கபூர் கேள்வி கேட்டுள்ளார். இவர், பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ உள்பட பல படங்களில் நடித்தவர். மிருகக்காட்சி சாலைகளில் தனிமைப்படுத்தப்பட்ட விலங்குகளின் போட்டோக்களுடன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஸ்ரத்தா கபூர் கூறியதாவது: கொரோனா வைரஸ் உலகையே

தனிமையில் இருக்கும்படி செய்துள்ள இந்த நேரத்தில், நாம் அனைவரும் மன  அழுத்தம், பதற்றம் ஆகியவற்றால் தனிமையின் பாதிப்பை உணர்ந்துள்ளோம்.  

அதுபோன்றே விலங்குகளும் பாதிப்பு அடையும். மனிதர்களாகிய  நாம் ஒரு துன்பத்தை அனுபவிக்கும் வரை, அந்த துன்பத்தில் இருக்கும் மற்றவர்களின் நிலையை புரிந்துகொள்ள மறுக்கிறோம். ஆனால், நாம் இப்போது  சிறையில் அடைக்கப்பட்டால் எப்படி இருக்கும் என்பதை நன்கு உணர்ந்துவிட்டோம்.

லட்சக்கணக்கான விலங்கு கள் தனிமையில் அடைக்கப்படும்போது, வாழ்க்கை  முழுவதும் துன்பத்தை அனுபவிக்கின்றன. மனநலம்  என்பது மனிதர்களுக்கானது மட்டுமல்ல, விலங்குகளுக்கும் உண்டு. இந்த பூமியை  நம்முடன் சேர்ந்து பங்கு போட்டுக் கொண்டிருக்கும் மற்ற உயிர்களிடத்திலும் அன்பு  காட்டுவோம். நாம் இந்த பூமியின் விருந்தினர்களே தவிர எஜமானர் கள் அல்ல என்று உணர்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap