6.4 ரிக்டர் அளவு நிலநடுக்கம் இன்று ஜப்பானில் நிகழ்ந்தது.

ஜப்பான் நாட்டின் கிழக்கு கடற்கடை பகுதியை மையமாக கொண்டு இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பசுபிக் பெருங்கடலில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ஹோன்ஷு தீவின் மியகி மாகாணம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டது.

பசுபிக் பெருங்கடலில் 41 கிலோ மீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.4 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் முழுமையாக வெளியாகவில்லை. ஆனால், நிலநடுக்கத்தின் தாக்கம் சற்று குறைவாக இருந்த காரணமாக ஜப்பானில் எந்தவித சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.

வியியல் அமைப்பு ரீதியில் ஜப்பானில் நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்கள் அடிக்கடி ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap