
பல்வேறு பகுதிகளுக்கு பகல் வேளைகளில் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி தங்களது அன்றாட பணிகளை நிறைவேற்றிக்கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கொதுமக்கள் சமூக இடைவெளியைப் பேணுவது அவசியம் என்பதோடு, ஒரு மாவட்டத்திலிருந்து இன்னுமொரு மாவட்டத்திற்கு சென்று குடியேறுவது இன்னும் தடை செய்யப்பட்டுள்ளதாக காவலதுறை ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.