சுவிஸ் மக்கள் இணையத்தில் கடந்த 30 நாட்களாக தேடிய விடயங்கள்

ArgYou எனும் வணிக ஆய்வு நிறுவனம் கடந்த 30 நாட்களாக வீடுகளில் முடங்கி இருக்கும் சுவிஸ் மக்கள் இணையத்தில் எத்தகைய சொற்களை அதிகம் தேடுகிறார்கள் என கண்டறிந்து வெளியிட்டுள்ளது.

சுவிசில் சுக் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தின் ஆய்வில் 600,000 சுவிஸ் வாழ் மக்கள் லண்டன் நகரிற்கும், 400,000 மக்கள் பரிஸ் நகரத்திற்கும், கிட்டத்தட்ட 200,000 மக்கள் பெர்லீன் நகருக்கும் பயணம் செய்ய வாய்ப்புத் தேடி இருக்கின்றார்களாம்.

அதுபோல் உடற்பயிற்சி நிலையம், அழகு நிலையம், முடிதிருத்து நிலையம், உருவிநிலையம் (மசாஜ்), விடுமுறை, மகப்பேறு, உடல்நலம் மற்றும் திருமணம் ஆகிய தேடல்களை இணையத்தில் அதிகம் தேடியிருக்கிறார்கள் சுவிஸ் மக்கள்.

கூகிள் தேடல், மற்றும் சமூகத் தளங்களில் சுவிஸ் வாழ் மக்கள் தேடும் சொற்களை இந்த நிறுவனம் தமது ஆய்விற்கு உட்படுத்தி இத்தகவலை வெளியிட்டுள்ளது.

190 இணைய நிறுவனங்களில் தேடப்பட்ட சொற்களின் அளவைக்கொண்டு இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக இந் நிறுவனத்தின் தலைவர் கிறஸ்தோப் கிளவுசெர் பொது ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap