கொரோனா வைரஸ் காரணமாக பிரான்ஸ் மிகப்பெரிய அளவிலான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது.


கடந்த எட்டுவார காலமாக பிரான்சில் உள்ளிருப்பு சட்டம் நடைமுறையில் உள்ளது. முதல் இரண்டு வாரங்களில் பொருளாதாரம் (மொத்த உள்நாட்டு தயாரிப்பு – le produit intérieur brut (PIB) ) 8% வீதம் வீழ்ச்சியடைந்திருந்தது.

இந்நிலையில், எட்டு வாரங்களின் பின்னர் இந்த பொருளாதார வீழ்ச்சி 32% வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இது ஒரு பாரிய வீழ்ச்சியாகும்.

பிரான்சில் விமான நிலையங்கள், சுற்றுலாத்தலங்கள், விடுதிகள், தொழிற்சாலைகள் என அனைத்தும் முடங்கி உள்ளதால் பலத்த வருவாய் இழப்பை பிரான்ஸ் சந்தித்துள்ளது.

இந்த எட்டு வார காலத்தில் €120 பில்லியன் யூரோக்கள் வருவாயை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap