வித்யா பாலன் அவர்கள் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். இவர் தற்போது இருக்கும் கொரோணா பிரச்சனையை கருத்தில் கொண்டு அதை தடுப்பதற்கான முதற்கட்ட ஏற்பாடாக மாஸ் தயாரிப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொடுக்கின்றார்.
வித்தியா பாலன் அவர்கள் தான் ஒரு சினிமா நடிகையாக இருந்து கொண்டும் கொரோணா ஊரடங்கு காலத்தில் எதையாவது வித்தியாசமாக செய்து வருகின்றார்.
அந்த வரிசையில் பாலிவுட் நடிகையான வித்யாபாலன் வீட்டிலிருக்கும் துணிகளைக் கொண்டு எளிதாக மாஸ்க் தயாரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டு அதில் அவர் கூறியிருப்பது
கொரோணாவை தடுப்பதில் மாஸ்க் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆனால், இன்று உலகம் முழுவதும் இந்த மாஸ்க்கிற்கு மிகப்பெரிய தட்டுப்பாடு நிலவுகின்றது.
ஆகவே , அவர் துப்பட்டா, தாவணி, பழைய சேலை இப்படி ஏதாவது பயன்படுத்தாத பழைய துணியை எடுத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றார்
ரப்பர்பேண்டை எடுத்துக் கொண்டு துணிகளை நான்கு மடங்காக மடித்து அதன் ஓரத்தில் வளையத்தை மாட்டி எளிமையான முறையில் தயாரித்து விடலாம் இவ்வாறு அவர் கூறும் வீடியோ சமூவலைத்தளங்களில் பரவிவருகின்றது.