கலக்கப்போவது யாரு நிகழ்ச்சித் தொகுப்பாளியும், கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவிற்கு சகோதரியாகவும் நடித்தவரும் , தேன்மொழி எனும் மெகா சீரியலில் தற்போது நடித்து வருபவருமான ஜாக்லின்
சமீபத்தில், தனது பக்கத்து வீட்டுக்காரருடனான சிறிய பிரச்சினையில், மிகவும் வருத்தபட்டதாகக் கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதையடுத்து அடிக்கடி தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், தற்போது ஜாக்குலின் ஒரு கிராமப்புற இடத்திலிருந்து ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் அவரும் அவருடைய துணை நடிகையுடன் சேர்ந்து சாகுபடிக்கு பாசனம் செய்ய பயன்படுத்தப்படும் பம்ப் செட் தொட்டியில் ஜாலியாக குளியல் போட்டுள்ளார். அந்த வீடியோவில், தான் காலையில் ஷூட்டிங்கிற்கு குளிக்காமல் வந்ததாகவும், அதனால் தற்போது குளித்துக் கொண்டிருப்பதாகவும் விளையாட்டாக பேசியுள்ளார்.