நடிகர் விஜய் தற்போது பெரும் தொகையை கொரோனா நிவாரண நிதியாக அளித்துள்ளார்.
மத்திய மானில அரசுகளுக்கு பிரபலங்கள் பலரும் கொரோணா நிதி வழங்கிவருகின்றனர்.
இந்தவகையில் , நடிகர் விஜய் ரூ. 1.30 கோடியை உதவித் தொகையாக அளித்துள்ளார். அதன்படி, நடிகர் அஜித்தை விட அதிகமாக நிதியளித்துள்ளார், ஆனால் அதை எப்படி பிரித்து வழங்கியுள்ளார் என்பது தான் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் PM Cares நிதிக்கு ரூ.25 லட்சம், தமிழ்நாடு முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம் நன்கொடை அளித்துள்ள அவர், அதையும் தாண்டி கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம், கர்நாடக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சம், ஆந்திர முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சம், தெலங்கானா முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சம், பாண்டிச்சேரி முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சம் என தென்னிந்திய மாநிலங்கள் முழுவதுக்கும் நிதியளித்துள்ளார். மேலும் தென்னிந்திய திரைப்பட தொழிளார் சம்மேளனத்திற்கு (FEFSI) ஊழியர்களின் நலனுக்காக ரூ. 25 லட்சம் கொடுத்துள்ளார்.
முன்னதாக, FEFSI-க்கு ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, சிவகுமார் குடும்பம், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், கலைப்புலி எஸ். தானு, யோகி பாபு, நயந்தாரா உள்ளிட்ட நடிகர்கள் தங்கள் பங்களிப்பைச் செய்துள்ளனர். சமீபத்தில் ‘தல’ அஜித் ரூ. 1.25 கோடி நிதியளித்தது குறிப்பிடத்தக்கது.