நடிகர் சூரியாவின் தம்பியான நடிகர் கார்த்திக் எப்போதும் சமுகத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருபவர். அவர் தற்போ கொரோணா பிரச்சினையிலும் தன்னை ஈடுபடுத்தி வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் டாக்டர் சைமனின் இறுதிச் சடங்கில் நடந்த சம்பவத்திற்கு அவர் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மருத்துவரின் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ள அவர் “டாக்டர் சைமன் அவர்களின் இறுதிச் சடங்கை இடையூறு செய்தது தமிழ்ச் சமூகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இனியும் இதுபோன்ற தவறு நிகழாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். திரு. சைமன் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் அனைவரின் சார்பாக என் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்!” எனக் கூறியுள்ளார். டாக்டர் சைமன் அவர்களின் இறுதிச் சடங்கை இடையூறு செய்தது தமிழ்ச் சமூகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இனியும் இதுபோன்ற தவறு நிகழாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். திரு. சைமன் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் அனைவரின் சார்பாக என் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்
கோவித் -19 நிவாரணத்திற்காக கார்த்தியும் தனது முயற்சியைச் செய்து வருகிறார். அவர் தனது சகோதரர் சூர்யா மற்றும் தந்தை சிவகுமாருடன் இணைந்து FEFSI உறுப்பினர்களின் நலனுக்காக ரூ. 10 லட்சம் நிதியளித்தார். கார்த்தி கடைசியாக ஜீத்து ஜோசப் இயக்கிய ‘தம்பி’ திரைப்படத்தில் நடித்தார். அதையடுத்த தற்போது மணிரத்னத்தின் ‘பொன்னியன் செல்வன்’ படத்தில் நடிக்கும் அவர், சோழ மன்னர் வல்லவராயன் வந்தியத்தேவன் வேடத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் வெடித்ததால் வேறு பல படங்களும் பாதிக்கப்பட்டுள்ளதைப் போலவே இந்த படத்தின் படப்பிடிப்பும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.