சீரியல்களுக்கு என்னநடக்கப் போகிறது? நடிகை ராதிகா..

இன்றைய கோரோணா சூழ்நிலை காரணமாக டிவி சீரியல் நிகல்வுகளை எடுக்கமுடியாத சூழ் நிலை நிலவுவதோடு ஒலபரப்பாகும் நிகழ்வுகள் கூட பழைய நிகழ்வுகளையே ஒலிபரப்புகின்றன.

ஊரடங்கு மே 3 ம் தேதி வரை தொடர்கிறது. இதனால் மே 11 முதல் சீரியல்கள் ஒளிபரப்பாகும் என தொலைக்காட்சி வட்டாரத்தில் சொல்லப்படுவதாக தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் சீரியல்களில் முக்கிய நபராக இருக்கும் ராதிகாவும், குஷ்பூவும் விளக்கம் அளித்துள்ளனர்.

இதில் குஷ்பூ, பெஃப்சி தலைவரிடமும், சுகாதாரத்துறை அமைச்சரிடமும் பேசியதாகவும், அதிக அளவிலான பரிசோதனைகள் நடைபெற்று வருவதால் ஏப்ரல் 27 ம் தேதிக்கு பின்னரே படப்பிடிப்புகள் பற்றி பேசமுடியுமென கூறிவிட்டார்களாம். அதோடு வெளி இடங்களுக்கு செல்லாமல், முக்கிய நபர்களை கொண்டு ஒரே நாளில் அதிகபட்ச எபிசோடுகளை படமாக்குங்கள் என சொல்லியதாக குஷ்பூ கூறியுள்ளார்.

அதே போல் நடிகை ராதிகா மே 5 ம் தேதிக்கு பின் படப்பிடிப்புகள் செய்யலாம் என கூறப்படவில்லை, கதையை தயார் செய்து ஷூட்டிங்குக்கு தயாராக இருக்கும் படி கூறியுள்ளேன். கோடம்பாக்கம் ஹாட் ஸ்பாட்டில் இருக்கிறது. சென்னையில் அதிக பாதிப்பு. ஷூட்டிங் பற்றி இப்போது பேச முடியாது. ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களிலும் படப்பிடிப்பு பற்றி யோசிக்க முடியாது. இந்த சூழ்நிலையை பற்றி எப்படி திட்டமிட்டு பணியாற்றப்போகிறோம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap