துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இங்கினியாகல வனவிலங்கு காரியாலய அதிகாரி ஒருவர், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (22) இரவு இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவத்தில், 25 வயதுடைய அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போரா 12 ரக துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

தம்புள்ளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share via
Copy link
Powered by Social Snap