’விவசாயத்தின் மூலம் தன்னிறைவு அடைவோம்’

“எமது விவசாயத்தின் மூலம் தன்னிறைவு அடைவது மற்றுமன்றி நமது உற்பத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் நமக்கு சிறந்த சந்தர்ப்பத்தை உருவாக்குவதே எனது நோக்கம்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பொருளாதாரம் திட்டத்தில் மாற்றம் கொண்டு வரும் அதேவேளை எமது பொருளாதார திட்டத்தை மாற்றி சுதேச பொருளாதார திட்டத்துக்குச் செல்வதற்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாக இதனை நான் காண்கிறேன். இதுவரை காலமும் எமது நாட்டில் உற்பத்தி செய்யமுடியுமானவற்றைக் கூட நாம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தோம். எமது விவசாயத்தின் மூலம் தன்னிறைவு அடைவது மட்டுமன்றி நமது உற்பத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் நமக்கு சிறந்த சந்தர்ப்பத்தை உருவாக்குவதே எனது நோக்கம்” என, ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Share via
Copy link
Powered by Social Snap