யாழ் போதனாவுக்கு வரும் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு உள்ளமையால் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது.

இவ்வாறு மருத்துவமை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும்,

மருத்துவமனையில் அத்தியாவசியமான சேவைகளுக்காக வருபவர்கள் முன்னாயத்தங்களோடு வர வேண்டும். அத்துடன் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும். ஒன்றுகூடிக் கதைத்தல், ஒருவருக்கு அருகில் செல்லுதல் அல்லது அவ்வாறான செயற்பாடுகளை முற்றாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இங்கு ஒருவர் நோயாளியாக இருக்கின்ற போது ஒரு நாளில் ஒரு தடவை வந்து அவர்களுக்குத் தேவையான பொருள்களை வழங்கிச் சென்றால் போதுமானதாக இருக்கும்.

இப்போது மருத்துவமனையில் இருக்கின்ற பிரிவுகள், தொலைபேசியூடாகக் கிடைக்கும் கோரிக்கைக்கு அமைவாக மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இதேவேளை கொழும்பிலிருந்து வந்தவர்கள் தொடர்பாக பொதுமக்கள் அதிகளவில் பதற்றம் அடையத் தேவையில்லை. இருப்பினும் மிக அவதானமாக இருக்கவேண்டும். – என்றார்.

Share via
Copy link
Powered by Social Snap