கடற்படை வீரர்களுக்கு பயணக் கட்டுப்பாடு!

பாதுகாப்பு கடமையிலுள்ள படையினரை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சகல கடற்படை வீரர்களுக்கும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், அவர்களுக்கு விடுமுறை வழங்கப்படாத நிலையில் அனுமதி வழங்கப்பட்ட கடமைகளுக்கு மாத்திரமே முகாம்களை விட்டு வெளியேற முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், செலிசர கடற்படை முகாம் தற்போது முடக்கப்பட்டுள்ள நிலையில் அதற்குள் இருந்து வெளியேறவும் பிரவேசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடற்படையைச் சேர்ந்த 65 பேர் இதுவரை கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். குறித்த கடற்படை வீரர்களுடன் நெருக்கிப் பழகிய சகலரையும் பீ.சீ.ஆர் சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap