ஊரடங்கு தளர்வின் பின்னர் விசேட போக்குவரத்து முறை!

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னர், கொழும்பு மாவட்டத்திலுள்ள அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்ற வருகைதருவோருக்காக, முறையான விசேட போக்குவரத்து ஒழுங்குகளை எற்படுத்தி கொடுக்க, இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

பணிகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், நிறுவனத்தின் பெயர், ஊழியர்கள் பணிக்கும் வருகைதரும் இடம், வீதி ஒழுங்கு, பணியாளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை மின்னஞ்சல் செய்து, சேவையை பெற்றுக்கொள்வதற்காக பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, dgmoperation@sltb.lk இணையத்தள முகவரியில் பிரவேசித்து தகவல்களை பதிவிடுமாறு அறிக்கப்பட்டுள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap