இன்றைய இராசி பலன்.

மேஷம்:

வேலைவாய்ப்பு சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். உறவினரின் உதவி கிடைக்கும். உணவு சம்பந்தப்பட்ட வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். பெண்கள் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வர்.

ரிஷபம்:

பெண்களுக்கு உடல் நலம் நன்றாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். மகன் அல்லது மகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மிதுனம் :

எதிர்பாராத உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். தெய்வீக செயல்களில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து நண்பருக்கும் உதவுவர். தம்பதிகளிடையே புரிதல் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்கு நல்லவர்களின் ஆதரவு கிடைக்கும்.

கடகம்:

வீடு, நிலம் சம்பந்தமான வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் வரும். பல காலம் அவதியடைச் செய்து கொண்டிருந்த நோயின் தீவிரம் குறையும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை நடத்துவர்.

சிம்மம் :

எதிரிகள் மனம் மாறுவார்கள். பெரிய மனிதர்களின் நட்பும் அதனால் ஆதாயமும் உண்டாகும். வெளியூர், வெளிநாடு சென்று நல்ல வேலையில் அமர்வதற்கான ஆர்டர் வரும். பணியிடங்களில் ஏற்படும் பிரச்னைகள் சுமூகமாக தீர்ந்து விடும்.

கன்னி:

காதலர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வேலையே கிடைப்பதற்கான சூழல் உருவாகும். தொழிலில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை எட்டுவீர்கள். நீண்ட நாள் கனவு நிறைவேறும்.

துலாம்:

புதிய வீடு, மனை, வாங்கும் யோகம் உண்டாகும். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர உறவுகளுடன் இருந்து வந்த பிரச்னைகள் அனைத்தும் சரியாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு, மதிப்பு அதிகரிக்கும்.

விருச்சிகம்:

புன்னகையுடன் எதையும் எதிர்கொள்வீர்கள். விலகிச் சென்ற உறவுகள், நண்பர்கள் தேடி வந்து உறவு கொண்டாடுவர். உடல் நலன் பற்றிய அக்கறை தேவை. தொழிலில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

தனுசு:

அலுவலகப் பயணங்களால் நல்ல லாபத்தை பெறுவீர்கள். முயற்சிகளில் சிறிய தடை ஏற்பட்டு பின் நீங்கும். காலையில் குடும்பத்தில் நிம்மதியற்ற சூழல் நிலவினாலும் அது மாலையில் சரியாகி சிரிப்பும் குதுாகலமும் உண்டாகும்.

மகரம்:

தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். உங்களின் சமூகத் தொடர்புகள் விரிவடையும். ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். பணியாளர்களுக்கு விரும்பிய பதவி உயர்வு கிடைக்கும். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள்.

கும்பம்:

உங்கள் மீதிருக்கும் போட்டி, பொறாமை, மறைமுக எதிர்ப்பு நீங்கி நிம்மதி பெறுவீர்கள். நல்ல நண்பர்களின் உதவி கிடைக்கும். வயிறு சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்படக்கூடும். அலுவலக ரீதியாக வெளிநாடு சென்று பணிபுரியும் யோகம் உண்டாகும்.

மீனம்:

பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் பல சாதனைகளை செய்து விரும்பிய உயர்படிப்பை படிக்கும் வாய்ப்பை பெறுவர். ஒவ்வாத உணவை தவிர்ப்பது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap