வெளி மாவட்ட மாணவர்களின் செலவையேற்ற தியாகேந்திரன்!

யாழ். பல்கலைக்கழக வெளிமாவட்ட மாணவர்களின் முழுச் செலவையும் தியாகி அறக்கொடை நிலையத்தின் ஸ்தாபகர் வாமதேவன் தியாகேந்திரன் ஏற்றுள்ளார்.

ஊரடங்கு சட்டம் காரணமாக தமது சொந்த இடங்களுக்கு போக முடியாமல் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த வெளிமாவட்ட மாணவர்களின் உணவுத் தேவையையும் அவர்கள் தமது இடங்களுக்கு செல்வதற்கான செலவுகளையும் தியாகேந்திரன் ஏற்றுள்ளார்.

கொரோனா நிதியத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கியது மட்டுமல்ல ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுத் தேவையை நிறைவு செய்வதற்கு இதுவரை ஒரு கோடி ரூபாவையும் வழங்கியுள்ளார்.

Share via
Copy link
Powered by Social Snap