யாழ். மாநகர சபை அமர்வு ஒத்திவைப்பு!

யாழ். மாநகர சபையின் அமர்வில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக எதிர்வரும் 21 ஆம் திகதி வரை சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழ். மாநகர துணை முதல்வர் துரைராசா ஈசன் தலைமையில் இன்றைய அமர்வு இடம்பெற்றது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மாநகர சபையின் இன்றைய அமர்வு நாவலர் வீதியில் அமைந்துள்ள நாவலர் மண்டபத்தில் இடம்பெற்றது.

எனினும், துணை முதல்வர் முடிவுகளை எடுக்கமுடியாது என தெரிவித்தமையால் சபையில் குழப்பம் ஏற்பட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி என்பன சபையிலிருந்து வெளியேறியுள்ளன.

Share via
Copy link
Powered by Social Snap