உர இறக்குமதிக்காக 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!

உர இறக்குமதிக்காக 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு அறுவடைக்கான விசேட கடன் பெற்றுக்கொடுக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கலைஞர்களுக்கு சலுகை வட்டி முறைமையின் கீழ் கடன் வழங்கவும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதேவேளை, வௌிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்ள 24 மணித்தியால தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1989 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு அவர்கள் தொடர்பான தகவல்களை உறவினர்கள் அறிந்துகொள்ள முடியும் என அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.

Share via
Copy link
Powered by Social Snap