‘சந்திரமுகி 2’: வேட்டையன் மன்னன் கேரக்டரில் நடிக்கும் பிரபல நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கிய ‘சந்திரமுகி’ திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் 15 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது. ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் உருவாகவுள்ள ’சந்திரமுகி 2’படத்தில் ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக உறுதி செய்யப்பட்ட செய்திகள் வெளியானது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் ’சந்திரமுகி 2’திரைப்படம் வேட்டையன் மன்னன் மற்றும் சந்திரமுகி இடையே நடக்கும் மோதல் தான் கதை என்றும் இதில் வேட்டையன் என்ற கொடுங்கோல் மன்னன் கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடிக்கவிருப்பதாகவும் இயக்குனர் பி.வாசு தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் முதல் பாகத்தில் நடித்த மனோதத்துவ டாக்டர் வேடத்திலேயே நடிப்பார் என தெரிகிறது. மேலும் சந்திரமுகி படத்தில் நடித்த முக்கிய நடிகைகளான ஜோதிகா மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ’சந்திரமுகி 2’ படத்திலும் நடிப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share via
Copy link
Powered by Social Snap