புட்ட பொம்மா பாடலுக்கு நடனம் ஆடிய பிரபல கிரிக்கெட் வீரர்!

தெலுங்கில் அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டே நடித்த அல வைகுந்தபுரம்லு படத்தில் வரும் புட்ட பொம்மா பாடல் மிகவும் பிரபலம். இந்த பாடலில் அவர்கள் ஆடும் நடனமும் சமூக வலைத்தளங்களில் அதிகம் ட்ரெண்ட்டானது.

ரசிகர்கள் பலரும் அந்த பாடலுக்கு நடனம் ஆடி டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், தனது மனைவி மற்றும் மகள் உடன் சேர்ந்து புட்ட பொம்மா பாடலுக்கு ஆடியுள்ளார்.

அந்த டிக் டாக் விடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் வார்னர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. அதற்கு நடிகர் அல்லு அர்ஜுன் நன்றி தெரிவித்துள்ளார்.

Share via
Copy link
Powered by Social Snap