‘வலிமை’ படம் குறித்த முக்கிய அறிவிப்பு: அஜித் ரசிகர்கள் அப்செட்

அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கால் அடுத்தகட்ட படப்ப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பிரச்சனை முழுவதும் முடிந்தபின்னரே ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நாளை மே 1ம் தேதி தல அஜித் பிறந்தநாளையொட்டி ’வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் உள்ளிட்ட அப்டேட் வரும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில் கொரோனா காரணமாக எந்த அறிவிப்பும் வராது என்று தயாரிப்பு தரப்பில் அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கோவிட்‌ 19 என்னும்‌ கொரோனா என்கிற கொடிய நோயின்‌ தாக்கத்தில்‌, அகில உலகமே போராடிக்‌ கொண்டு இருக்கும்‌ இந்த தருணத்தில்‌ எங்கள்‌ நிறுவனம்‌ தயாரிக்கும்‌ எந்த படத்துக்கும்‌ எந்த விதமான விளம்பரமும்‌ செய்ய வேண்டாம்‌ என்று எங்கள்‌ நிறுவனத்தில்‌ பணியாற்றும்‌ நடிகர்‌, நடிகையர்‌ மற்றும்‌ தொழில்‌ நுட்ப கலைஞர்கள்‌ ஆகியோரை கலந்து ஆலோசித்து, ஒருமித்தக்‌ கருத்தோடு முடிவெடுத்து உள்ளோம்‌ என்பதை தெரிவித்து கொள்கிறோம்‌. அதுவரை தனித்து இருப்போம்‌, நம்‌ நலம்‌ காப்போம்‌.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதால் நாளை ‘வலிமை’ குறித்த எந்தவொரு அறிவிப்பும் வெளிவராது என்பது உறுதியாகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.

Share via
Copy link
Powered by Social Snap