
கொரோனா நோய் தொற்றால் உலகம் முழுக்க 31 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. நாளுக்கு நாள் தொற்று இன்னும் பரவி வருகிறது.
பல நாடுகளிலும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மக்கள் பலர் வீடுகளிலேயே முடங்கும் சூழ்நிலை எழுந்துள்ளது. இதனால் பலர் டிவி, செல்போன், இண்டர் நெட் என மூழ்கியுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் இந்திய படமான 3 இடியட்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட படம் என்ற சிறப்பை பெற்றுள்ளதாம். அமீர் கான், மாதவன், ஷர்மான் ஜோசி நடிக்க ராஜ்குமார் ஹிரானி இப்படத்தை இயக்கி வெளியிட்டு வெற்றிபெற்றார். 11 வருடங்கள் கடந்தும் ஹிந்தியில் சிறந்த படங்களுள் ஒன்றாக விளங்குகிறது.
தமிழில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிக்க சங்கர் இப்படத்தை நண்பன் என ரீமேக் செய்து இயக்கினார்.