
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் மே மாதம் 11ஆம் திகதிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏனைய பகுதிகளில் 04ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு நீக்கப்படும் ஊரடங்கு உத்தரவு இரவு 08 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும்.
அத்துடன், அந்தப் பகுதிகளில் எதிர்வரும் 06ஆம் திகதி இரவு எட்டு மணிக்கு அமுல்படுப்படுத்தப்படும் ஊரடங்கு எதிர்வரும் 11ஆம் திகதி அதிகாலை 5 மணிவரை தொடர்ந்து அமுலில் இருக்கும்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு அமுலிலுள்ள போதிலும், மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவனங்களின் மீள் செயற்பாடுகள் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.