மாஸ்டர் நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட வீடியோ! இந்த ரகசியம் தெரியுமா உங்களுக்கு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள படம் மாஸ்டர். கடந்த மாதம் வெளியாக வேண்டிய இப்படம் கொரோனாவால் தள்ளிப்போய்விட்டது.

இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவரை தெரியாதவர்கள் உண்டோ? நடிகையாகவும் பாடகியாகவும் சினிமாவில் கலக்கி வருபவர். கடைசியாக இவரை வெற்றி மாறன் இயக்கத்தில் வந்த வடசென்னை படத்தில் பார்த்திருப்பீர்கள்.

தற்போது இன்ஸ்டாகிராமில் மூன்று நிமிட குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். லாக்டவுன் என பெரிடப்பட்டுளள இந்த குறும்படத்தை நடிகர் ஆதவ் கண்ணதாசன் இயக்கியுள்ளாராம்.

லாக்டவுன் காலத்தில் வீட்டில் தனியாக இருக்கும் ஆண்ட்ரியா வீட்டில் பியானோ வாசித்துக்கொண்டும், பாடல் கேட்டுக்கொண்டும், புத்தகம் படித்துக்கொண்டும் இருக்கும் அவர் வீட்டுக்கு வெளியே நடக்கும் நிகழ்வுக்கு செல்லும் போது அமானுஷ்ய அனுபவங்களை சந்திக்கிறார். இப்படம் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு படம் போல எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share via
Copy link
Powered by Social Snap