மெனிங் சந்தைக்கு வருபவர்களுக்கு ஓர் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் அதிகளவில் தாக்கக்கூடும் என்ற வகையில் இனங்காணப்பட்டுள்ள வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கொழும்பு- மெனிங் சந்தைக்கு வருகைதருவதை தவிர்க்குமாறு, பொது வர்த்தகச் சங்கம் கோரியுள்ளது.

அத்துடன், மொத்த விற்பனைக்காக மாத்திரம் திறக்கப்பட்டுள்ள கொழும்பு மெனிங் சந்தைக்கு வருகைதருபவர்கள் சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறு, சங்கத்தின் தலைவர் லால் ஹெட்டிகே தெரிவித்துள்ளார்.

Share via
Copy link
Powered by Social Snap