வெசாக் பண்டிகையின் போது இவ்வாறு செயற்படவும்..

வெசாக் பண்டிகையின் போது பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் சுகாதார அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து அனைவரையும் பாதுகாப்பதற்காக இந்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி விகாரைகளுக்கு சென்று வழிபடும்போது தனிமனித இடைவெளிகளை கடைப்பிடிப்பது கடினம் என்பதால் வீடுகளிலேயே வழிபாட்டு நிகழ்வுகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெசாக் கொண்டாட்டங்கள், அலங்காரங்களை தமது வீடுகளுக்குள் மட்டுப்படுத்திக்ககொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பொருத்தமான சுகாதார பரிந்துரைக்கு ஏற்ப வெசாக்குடன் தொடர்புடைய வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டவேண்டும் என்றும், காதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap