
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் தமிழ் நடிகையுமான ஜனனி ஐயர் பாடிய முதல் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘உன் நெருக்கம்’ என்று ஆரம்பிக்கும் இந்த பாடலை இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி கம்போஸ் செய்ய இந்த பாடலை அவருடன் நடிகை ஜனனி ஐயரும் பாடியுள்ளார். இந்த பாடலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள ஜனனி ஐயர், ’என்னுடைய முதல் பாடும் அனுபவம்.
முதல்முறையாக என்னால் முடிந்தளவு முயற்சி செய்து பாடியுள்ளேன். இந்த பாடலை பாட எனக்கு ஊக்கம் அளித்த அஸ்வினுக்கு நன்றி. இந்த பாடல் ஸ்கைப் மூலம் ரிக்கார்டிங் செய்யப்பட்டது. இந்த பாடல் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்’ என்ரு கூறியுள்ளார்.
உண்மையில் ஒரு தேர்ந்த பாடகி போல் ஜனனி ஐயர் பாடியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டுக்கு குவிந்து வருகிறது. மேலும் தொடர்ந்து திரைப்படங்களுக்கும் பாட முயற்சி செய்யுங்கள் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஜனனி ஐயரின் இந்த பாடல் எப்படி உள்ளது என்பதை நீங்கள் கேட்டு உங்கள் கருத்துக்களை கமெண்ட் பகுதியில் பதிவு செய்யுங்கள்