புதுக்குடியிருப்பில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் சில மீட்பு!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் சில நேற்று மீட்கப்பட்டன.

புதுக்குடியிருப்பு நகர் பகுதியின் சுனாமி நினைவாலயத்திற்கு முன்னால் உள்ள வீதி ஓரத்தில் இவை புதைக்கப்பட்டிருந்தன

புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நீதிமன்ற உத்தரவுடன் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்து கனரக வாகனத்தை பயன்படுத்தி வெடிபொருட்களைத் தோண்டும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இதன்போது, மூன்று RPG எறிகணைகள் உட்பட சில வெடிபொருட்கள் சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட வெடிபொருட்களை அழிக்கும் நடவடிக்கையை விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இவை புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Share via
Copy link
Powered by Social Snap